Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

IPO மூலம் ரூ.8,800 கோடி திரட்டுகிறது மகாநதி

IPO மூலம் ரூ.8,800 கோடி திரட்டுகிறது மகாநதி

1992-ல் தொடங்கப்பட்ட மகாநதி, கோல் இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தித் துணை நிறுவனமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ், முதல்முறையாகப் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க செபி ஒப்புதல் பெற்றுள்ளது. இதன்மூலம் சுமார் ரூ.8,800 கோடி திரட்டப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த இந்நிறுவனம், கடந்த செப்டம்பரில் வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதற்கு செபி நவம்பர் 4-ம் தேதி இறுதிக் கருத்துகளை வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்கு வெளியீடு நவம்பர் இரண்டாம் பாதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெளியீட்டில், கோல் இந்தியா தனது வசமுள்ள 66.18 கோடி பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. முழுவதும் ஏற்கெனவே உள்ள பங்குகளின் விற்பனையாக நடைபெறுவதால், திரட்டப்படும் தொகை கோல் இந்தியாவுக்கே செல்லும். மகாநதி நிறுவனத்துக்கு நேரடியாக நிதி கிடைக்காது. பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படவுள்ளன.

1992-ல் தொடங்கப்பட்ட மகாநதி, கோல் இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தித் துணை நிறுவனமாகும். கடந்த நிதியாண்டில் 21.83 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. கோல் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 28 சதவீதம்.

ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.8,034 கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும், நிகர லாபம் ரூ.2,448.3 கோடியிலிருந்து ரூ.2,399 கோடியாகக் குறைந்துள்ளது. துணை நிறுவனங்களின் மதிப்பை வெளிக்கொணரும் கோல் இந்தியாவின் திட்டத்தில் இந்தப் பங்கு வெளியீடும் இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தி
6 வகை ஐஸ்கிரீம்களுடன் கேவின்ஸ் சிறப்பு பேக் அறிமுகம்
அடுத்த செய்தி
தீபாவளி - மல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை

தொடர்புடைய செய்திகள்